
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதார தடைகளால் பாதிக்கப்படுமானால், மாற்று வழிகள் மூலம் இந்தியா அதனை எதிர்கொள்ளும் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ராணுவ நடவடிக்கை 2022-ல் தொடங்குவதற்கு முன் நாம் நமது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 0.2% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். தற்போது அது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தி உள்ளது. முன்பு நாம் 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் பெற்று வந்தோம். அந்த எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.