
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இரு தரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித் ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.
கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா தொடர்ந்து தெளிவாக கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன். அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதிமுகவினர் அமித் ஷாவுடன் பேசட்டும். எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.