
`இன்டர்ஸ்டெல்லர்’, `இன்செப்ஷன்’, `டெனட்’ போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
`தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர்.
`இன்செப்ஷன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை மீண்டும் 3டி-யில் ரிலீஸ் செய்யக் கேட்டதற்காக விடாப்பிடியாக மறுத்தவர்.
கடைசியாக அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கினார்.
இதனைதொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வருடம் (2026) ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘The Odyssey’. மெட் டாமன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளியாக கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்திருக்கின்றன.
Within minutes tickets for Universal CityWalk have nearly completely sold out for the first IMAX 70mm screening of THE ODYSSEY a year in advance. pic.twitter.com/75ZNDUC7tP
— Dan Marcus (@Danimalish) July 17, 2025
இதனைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. படம் வெளியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…