
தமிழ்நாடு அறக்கட்டளையின் “கந்தசாமி மாணிக்கம் – பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டம்” சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ கந்தசாமி மாணிக்கம் – பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு (தலா ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) விருதுகள் வழங்கப்பட உள்ளன.
ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற அறக்கட்டளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010 என்ற முகவரிக்கு 15.09.2025 திங்கள் மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.