
டேராடூன்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வீணை என்ற தலைப்பில் புதிய பாடநூலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் ‘கங்கா கி கஹானி' என்ற அத்தியாயம், கோமுக்கிலிருந்து கங்காசாகர் வரையிலான கங்கை நதியின் பயணத்தை கூறுகிறது. ஹரித்வார், வாராணசி, பிரயாக்ராஜ், பாட்னா, கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கிறது.
இந்நிலையில், உத்தராகண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் நேற்று கூறும்போது, “உத்தராகண்டில் உள்ள 17,000 அரசுப் பள்ளிகளின் பாடதிட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு என்சிஇஆர்டியை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதுவரை பள்ளி பிரார்த்தனை கூட்டங்களில் பகவத் கீதை, ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.