
சென்னை: அனுமதியின்றி மாற்றங்களை செய்து வருவதால் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக வாடகை கட்டிடத்தை காலி செய்து தரக்கோரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் எங்களுக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கியிருந்தோம்.