
புதுடெல்லி: பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்குலியா சைத்பூர் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை துவங்கும் முன்பு வரை வெளி ஆட்கள் பலரும் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்றபடி இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி விசாரித்த கிராமத்தினர் அவர்கள் போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
எனவே, கிராமத்தில் நுழைவதற்காக இருக்கும் ஒரே ஒரு சாலையில் மூங்கில் தடுப்பை போட்டு மூடி வைத்துள்ளனர். இத்துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேரமும் 2-க்கும் மேற்பட்டவர்கள் காவல் பணியில் உள்ளனர். கிராமத்தை கடந்து செல்லும் வாகனங்கள் குறித்து விசாரித்து அவர்களின் விவரங்கள் ஒரு பதிவேட்டிலும் எழுதி வைக்கப்படுகிறது.