• July 17, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விஜய். இவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்கா மூர்த்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், `தாங்கள் எளிமையான குடும்பத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன், எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும். “மழைக்காக காத்திருக்கும் பயிர்களை போல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்…” என கோரிக்கை கடிதத்தினை அனுப்பி இருந்தார்.

மாணவனின் கடிதத்தை படித்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு வருகை தந்து, மாணவனை பாராட்டி பரிசளித்தார். ஆட்சியர் துர்கா மூர்த்தி பொறுப்பேற்ற 2-ம் நாள் மாணவரின் கடிதம் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் மாணவன் விஜயின் கோரிக்கையை ஏற்று எருமபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

`யார் விஜய்?’

அப்போது தனக்கு கடிதம் எழுதிய மாணவனின் நினைவு வரவே எருமபட்டியில் உள்ள அரசு அண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அந்த மாணவனின் வகுப்பறையில் நுழைந்த ஆட்சியர் துர்கா மூர்த்தி, `யார் விஜய்?’ என கேட்டுகொண்ட அவர் கடிதத்தை காட்டி, `எவ்வாறு என்னை பத்தி தகவல் தெரியும்?’ என கேட்க உடனடியாக விஜய் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்தது என தெரிவித்தார்.

மாணவனை பாராட்டி ஆட்சியர் பரிசு வழங்கினார்

இதனையடுத்து ஆட்சியர் துர்கா மூர்த்தி தன்னை பற்றி மாணவன் விஜய் என்ன எழுதியுள்ளான் என சக மாணவர்களுக்கு படித்து காட்டினார். இதனையடுத்து மாணவர் விஜயிடம் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்துரையாடினார். அப்போது, `போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்?’ என கேட்க `ஆங்கிலத்தில் எழுதினேன்’ எனக் கூற, `அதற்கு மாணவர் ஏன் தாய் மொழியில் எழுத முடியாதா..?’ என கேள்`வி எழுப்பினார்.

`தாராளமாக தமிழில் நமது தாய் மொழியில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்றவர்கள் தனது தாய் மொழியில் எழுதியுள்ளார்கள் அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்’ என்றார். மேலும் தனது சொந்த அனுபவங்களையும் தான் எவ்வாறு ஆட்சியராக வந்தேன் என மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *