• July 17, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

யார் இந்த நீதிபதிகள்?

இது குறித்து நீதிபதிகள் சங்கம், “எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளும், திங்கட்கிழமை 2 நீதிபதிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் | அமெரிக்கா

இவர்கள் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் போன்ற 10 மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் ஆவார்கள்.

இவர்கள் 17 பேரும் குடிவரவு நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் ஆவார்கள்” என்று கூறுகிறது.

“இது அறிவற்ற செயல். நீதிபதிகளை வேலையில் இருந்து நீக்குவதைக் காட்டிலும், அதிக நீதிபதிகளை வேலைக்கு எடுக்க வேண்டும். காரணம், பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன” என்றும் நீதிபதிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களை வெளியேற்றுவதிலும், வெளியேற்றப்பட வேண்டும் என்பதிலும் மும்முரமாக இருக்கிறார்.

மேலும், அரசுக்கு எதிராக பேசுபவர்கள், செயல்களை செய்பவர்களையும் வெளியேற்றி வருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அப்படி வெளியேற வேண்டும் என்று கூறப்படுபவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடுகின்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ரத்துகளையும், கால அவகாசங்களையும் கொடுக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான், நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. இன்னும் பல நீதிபதிகள் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *