
ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்தியரான சாபு தஸ்தகீரின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.
மைசூர் மாவட்டத்திலுள்ள கரபுராவில் 1924-ம் ஆண்டு பிறந்தவர், சாபு தஸ்தகீர். இவருடைய 13-வது வயதில், பிரிட்டீஷ் ஆவணப்பட இயக்குநர் ராபர்ட் பிளர்டி, தான் இயக்கிய ‘எலிபன்ட் பாய்’ என்ற படத்தில் யானை பாகனாக நடிக்க வைத்தார். இதன் மூலம் கவனிக்கப்பட்ட அவர், அடுத்து ‘தி ட்ரம்’ (1938), ‘தி தீஃப் ஆஃப் பாக்தாத்’ (1940), ‘ஜங்கிள் புக்’ (1942), ‘அரேபியன் நைட்ஸ்’ (1942) உள்பட பல படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டு ‘சாங் ஆஃப் இந்தியா’ என்ற படத்தில் நடித்த மர்லின் கூப்பர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.