
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களுக்கான முழு கல்விக்கட்டணத்தையும் மத்திய மாநில அரசுகள் சேர்த்து ஏற்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைகிறார்கள். ஆனால் இந்த கல்வி ஆண்டு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இதுவரை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. இதனால் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் விகடனுக்கு அளித்துள்ள விரிவான நேர்காணல் இது…