
மயிலாடுதுறை: “விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி” என்று மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், இபிஎஸ் பிரச்சாரத்தை விமர்சித்த ஸ்டாலின், “திமுக ஆட்சியைப் பற்றி போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ‘சுந்தரா டிராவல்ஸ்’ மாதிரி ஒரு பஸ் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்துகொண்டே இருக்கிறது.” என்று கூறினார்.
மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 271 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார். அதன்பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 8 புதியஅறிவிப்புகள்: