• July 16, 2025
  • NewsEditor
  • 0

வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால், கட்சியினரை களத்தில் இறக்கிவிட்டு களநிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வார்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள்.

ஆனால், தற்போது அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. ஓவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் ‘சத்து’க்களுக்கு ஏற்றவாறு, தேர்தல் வியூக நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து, தேர்தல் வேலைகளை செய்கிறது.

எடப்பாடி பழனிசாமி

அந்தவகையில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான். கடந்த முறை அ.தி.மு.க, தேர்தல் வியூகத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடைசி நேரத்தில்தான் சுதாரித்தது, அதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை.

அதனால், இம்முறை தேர்தல் வியூக வகுப்பாளர்களைத் தீவிரமாகத் தேடிவந்தது அ.தி.மு.க. அந்தவகையில், 2024-ல் ஆந்திர மாநிலத் தேர்தலின்போது, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்த, ஹைதராபாத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பிரமாண்யா’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது அ.தி.மு.க.

பவன் கல்யாணுக்கு வெற்றி கொடுத்திருப்பதால், அ.தி.மு.க-வும் பெரிதும் நம்பிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில்தான் ‘ஆந்திர அரசியலுக்கு அந்நிறுவனம் பின்பற்றிய அதே வியூகங்களைதான் தமிழகத்துக்கு பின்பற்றுகிறது’ என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

இதுகுறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சிலரிடம் பேசும்போது, “ஆந்திராவில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ” ‘Hello AP BYE BYE YCP’ ‘ BYE BYE Jagan’என்ற வாக்கியத்தைதான் மிகத்தீவிரமாக பிரசாரம் செய்தனர். அது எடுபடவும் செய்தது. இந்த நிலையில், ஆந்திர பாணியில் ‘BYE BYE Stalin’என்ற வாக்கியத்தை, சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி பயன்படுத்துகிறார்.

பவன் கல்யாண்

அது ஓரளவுக்கு ஒர்க்அவுட் ஆகவும் செய்கிறது. ஆனால், எங்களின் கவலை என்னவென்றால், ஆந்திராவின் அரசியல் களம் வேறு; தமிழகத்தின் அரசியல் களம் வேறு. இதுபோன்ற வாக்கியங்களுக்கு அந்த பாணியை பயன்படுத்தலாம். ஆனால், ஆந்திராவில் பயன்படுத்தப்பட்ட அதே வியூகங்களை, தமிழ்நாட்டிலும் செயல்படுத்தமுடியாது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் ஆந்திரா நிறுவனத்துக்கு முழுக்க தெரிய வாய்ப்பே இல்லை. தேர்தல் பிரசாரங்களுக்கான முன்னோட்டமாக கருதப்படும், இந்த சுற்றுப்பயணத்துக்கே, மெனக்கெடல் இல்லாமல், ஆந்திராவில் பயன்படுத்திய அதே வார்த்தைகளை எடப்பாடியை பயன்படுத்த வைக்கிறது வியூக நிறுவனம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு BYE BYE STALIN என்ற ஸ்லோகத்தைதான் எடப்பாடியும் பெரிதாக நம்பிக் கொண்டு இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக அதை எல்லா மேடைகளிலும் பயன்படுத்துகிறார்.

பவன் கல்யாண்

இப்படி தனித்துவமும் மெனக்கெடலும் இல்லாமல், காப்பி பேஸ்ட் வியூகங்களை செயல்படுத்தினால், அ.தி.மு.க-வின் பிரச்சார வியூகங்களை எதிர்தரப்பு ஈசியாக எதிர்கொள்ளும். அதேபோல, முழுக்க முழுக்க வியூக நிறுவனங்கள் சொல்லுவதையே ஃபாலோ செய்தால், தேர்தல் முடிவுகள் நினைத்தப்படி வராது. இதைத்தான் தலைமையிடமும் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *