
சென்னை: தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்களை நீக்கக் கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.