
புதுடெல்லி: ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் முழுமையான நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது.