
புதுடெல்லி: "இந்தி ஏன் கற்க வேண்டும் என்று இப்போது பேசுகிறோம். ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, 17 மொழிகளைக் கற்று புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்" என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பி.வி. நரசிம்ம ராவின் வாழ்க்கை மற்றும் மரபு எனும் தலைப்பில் சந்திரபாபு நாயுடு நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர், "பி.வி. நரசிம்ம ராவ் ஒரு அறிஞர். 17 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இப்போது நாம் இந்தி ஏன் கற்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, பிற மொழிகளையும் கற்றுக்கொண்டதால், அவர் ஒரு சிறந்த மனிதராக மாறினார்.