
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூலை 16) சிதம்பரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ எடப்பாடி பழனிசாமி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஸ்டாலின் நினைத்துகொண்டிருந்தார். ஆனால் நான் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி ஆகிவிடுமா? எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை.
இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். அதில் இபிஎஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது.

இந்தக் கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி அடையும் தனிபெரும் ஆட்சி அமைக்கும்.” என்றார்.
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, “காலம் கடந்துபோய்விட்டது” என்று பதில் அளித்தார்.