• July 16, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

tvk vijay

இரண்டாவது மாநில மாநாடு

விஜய் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.

வெற்றி நிச்சயம்.’ எனக் கூறியிருக்கிறார்.

இந்த மாநாட்டுக்கான பணிகளை தொடங்கும் விதமாக இன்று மதுரையின் பாரபத்தியில் பூமி பூஜையை நடத்தியிருக்கின்றனர்.

விக்கிரவாண்டி மாநாட்டுக்கான பூமி பூஜையை பிரமாண்டமாக நடத்திய நிலையில், மதுரை மாநாட்டுக்கான பூமி பூஜையை ஒரு சில மாவட்டச் செயலாளர்களுடன் எளிமையாக நடத்தி முடித்திருக்கின்றனர். மாநாடு நடைபெறும் திடம் மட்டும் கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கு அமையவிருப்பதாக தகவல் சொல்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *