
சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்’, `ஷேர்ஷா’ போன்ற படங்கள் மூலமாகத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
`ஷேர்ஷா’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த அவர், அவரையே காதலித்து கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்பும் நடித்துவந்த கியாரா அத்வானி கடந்தாண்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 15) மாலை மும்பையில் கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனைத் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அறிவித்திருக்கின்றனர்.
அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், “எங்கள் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. எங்களுடைய உலகம் என்றும் மாறாது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பதிவிட்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் கியாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…