• July 16, 2025
  • NewsEditor
  • 0

வருமான வரி தாக்கல் காலம் இது.

இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள் வருமான வரி தாக்கல் வலைதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

கடைசி தேதி என்ன?

வழக்கமாக, தனிநபர், இந்து கூட்டுக்குடும்பம், சங்கம் உள்ளிட்டோருக்குவருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆனால், இந்த ஆண்டு கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல்

ஒருவேளை, கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லையென்றால்…?

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, பிரிவு 139 (8A)-ன் கீழ், அடுத்த 48 மாதங்களுக்குள் அப்டேட்டட் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

இது முன்னால், 24 மாதக்காலமாக இருந்தது.

48 மாதங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய முடியுமானாலும், கூடுதலாக 60 – 70 சதவிகித வரி கட்ட வேண்டியதாக இருக்கும்.

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் என்ன?

பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்கு பின், வருமான வரி தாக்கல் செய்தால்… அதில் வருமான வரி நிலுவை இருந்தால்… தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ய…

ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *