
ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.
இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், தேர்தல் வியூகங்களும் சூடுபிடித்திருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் களமிறங்கும் அதிமுக – எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கப்பட்டு 37-ஆம் ஆண்டுகளாகியிருப்பது குறித்து, இன்று (ஜூலை 16) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாமக-வின் தலைவர் அன்புமணி, “பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா: வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா : வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள்… pic.twitter.com/YZUT7xIjCd
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 16, 2025
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும்.
அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs