
உலகமுழுவதும் சுமார் 800 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் டான் டான் என்று பதில் சொல்லும் ஓபன் AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான செயலியான ‘Chat GPT’ இன்று காலை முதல் திடீரென இடைநிறுத்தமாகியிருக்கிறது.
இன்று காலை 6 மணி முதல் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ‘Too many Concurrent Requests’ என இணையம் இயங்குவதில் கோளாறு இருப்பதாக பதிலளிக்கிறது. பலருக்கு இந்த இணையத்தில் உள்நுழைவதற்கே (LOG IN) முடியவில்லை. இந்தியா உள்பட வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் இதேநிலைதானாம்.
இந்த இணையக் கோளாறுகளுக்கானக் காரணம் உடனே கண்டிறிந்து, அதனை சரிசெய்யும் பணியில் ஓபன் AI நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அதுவரை வேலை செய்யாத Chat GPT-யில் திரும்பத் திரும்ப ‘Prompt’ செய்வதையும், தொடர்ந்து ‘Login’ செய்து பார்ப்பதையும் தவிர்ப்பது இப்பிரச்னையை தீவிரமாக்காமல், விரைந்து சரிசெய்வதற்கு உதவும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs