• July 16, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, ‘உங்களுடன் ஸ்டாலின்’ & ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். ‘அரசாங்கம்-கட்சி’ நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என கணக்கு. ஆனால், இதற்கு முட்டுக்கட்டை போடுமளவுக்கு, உட்கட்சியில் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். இதை சரிசெய்ய களையெடுப்பு அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார்.

அதற்கேற்ப தஞ்சாவூர் மா.செ மற்றும் எம்.பி கல்யாண சுந்தரம் கட்சி பதவியை நீக்கி, அங்கே கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை பொறுப்பாளராய் நியமித்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

ஏன் கல்யாணசுந்தரம் பதவி பறிபோனது? எப்படி அன்பழகனுக்கு யோகம் அடித்தது? இன்னொரு பக்கம், வளமான துறையில் ‘தியாகி டீம்’ கேட்கும் ‘6% கமிஷன்’. இதனால் கதறும் மன்றத்தினர்.

அடுத்து ‘பாஜக-வை ரிஜெக்ட் செய்வோம். விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என ஓபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் உட்கட்சி நிர்வாகிகள். அவரோ பாஜக பாசத்தில் இம்மியளவும் குறையாமல் இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் டீம், உடையும் அபாயத்தில் இருக்கிறது என்கிறார்கள் நிர்வாகிகள் இதை தடுக்குமா அவர்களுடைய செப்டம்பர் மாநாடு?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *