
துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது.
சஞ்சய் தத் பேசியது குறித்து லோகேஷ்கனகராஜிடம் கேட்டபோது, “அங்கே பேசிய பிறகு அவர் எனக்கு போன் செய்தார். ‘நான் வேடிக்கையாகத்தான் சொன்னேன், ஊடகங்களில்பெரிது படுத்திவிட்டார்கள்’ என்றார். நான், ‘அது பிரச்சினை இல்லை' என்றேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத்துடன் கண்டிப்பாக இன்னொரு படம் செய்வேன்” என்று தெரிவித்தார்.