
சென்னை: நகை திருட்டு, தீண்டாமை வன்கொடுமை மற்றும் ரியல் எஸ்டேட் வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தும் கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.