
விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்துக்கு பிரபல ராப் பாடகர் வேடன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிரபல ராப் பாடகராக பிரபலமாக இருப்பவர் வேடன். இவருக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காலகட்டத்தில் ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாய் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ என்ற பாடலை பாடினார். அண்மையில் வெளியான ‘நரிவேட்டா’ படத்தில் இவர் பாடிய ’வாடா வேடா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.