
அரியலூர்: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.