
சென்னை: சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்ட சம்பவத்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: “சேலம் – அண்ணா நகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு பெயின்டை வீசி அவமதித்துள்ளனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.