• July 15, 2025
  • NewsEditor
  • 0

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா. தற்போது 35 வயதாகும் இவர், 2008ம் ஆண்டு செவிலியர் பணிக்காக ஏமன் நாட்டிற்குச் சென்றார். அங்கு பல மருத்துவமனைகளில் பணியாற்றியவர், பிறகு 2011-ம் ஆண்டு கேரளா தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

நிமிஷா ப்ரியா

கடந்த 2015ஆம் ஆண்டு, நிமிஷா அங்குள்ள மருத்துவமனை பணியை உதறிவிட்டு, தனியாக க்ளினிக் தொடங்கினார். ஏமன் நாட்டு விதிப்படி, அந்நாட்டு குடிமகனால் தான் க்ளினிக் தொடங்கமுடியும். எனவே, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு, க்ளினிக் தொடங்கியிருக்கிறார்.

க்ளினிக் தொடங்கிய சமயத்தில் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிய தலால் அப்துல் மஹ்தி, ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் பணத்தை எடுத்துவிட்டு நிமிஷா பிரியாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துவிட்டு, அவரை உடலளவிலும், மனதளவிலும் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தலால் அப்துல் மஹ்தியிடம் இருந்து தப்பிப்பதற்காக, 2017 ஜூலை 25-ம் தேதி அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மஹ்தியின் உடல் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

தலால் அப்துல் மஹ்தி

இதற்கிடையே, அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிமிஷா பிரியா போலீஸில் சிக்கினார். அந்நாட்டுச் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொடுமைப்படுத்தியதால்தான் கொலை செய்ததாக நிமிஷா பிரியா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டும், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இருப்பினும், ஏமனில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது. எனவே மஹ்தியின் குடும்பத்தினர் பிளட் மணி எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு அவரை மன்னிக்க ஒப்புக்கொள்வது ஒன்றுதான் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இருக்கும் ஒரே வழியாக இருந்தது. ஆனால், ஏமன் நீதிமன்றம் நாளை (ஜுலை 16) நிமிஷாவிற்கு மரண தண்டனை விதித்திருந்தது.

அபுபக்கர் முஃதி

கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

இந்நிலையில் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட (ஜூலை 16) இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும் அது கைகூட வில்லை.

இந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமியத் தலைவர் அபுபக்கர் முஃதி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *