
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.