
புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்டிகள், 15 ஆயிரம் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும், குறைந்த ஒளி வசதி இருந்தாலும், இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மிகவும் தெளிவுடன் இருக்கும்.