• July 15, 2025
  • NewsEditor
  • 0

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் என பல்வேறு வகையான ஸ்கின் கேர் முறைகளை பின்பற்றி வருகிறோம்.

இந்த நிலையில், நாங்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களையும் விட்டுவைப்பதில்லை என்பதற்கு ஏற்ப சீனாவில் ஒரு புதிய ஸ்கின் கேர் முறை முறை ட்ரெண்டாகி வருகிறது. அது தாமரை இலை மாஸ்க். தாமரை இலைகளை முகத்தின் மேல் போட்டுக் கொள்வதால் முகம் பொலிவுடன் இருப்பதாக கூறுகின்றனர்.

Lotus face mask

தாமரை இலைகளை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தலாமா; தாமரை இலை முகப்பொலிவை பாதுகாக்கும் இயல்பு கொண்டவையா என, சென்னையைச் சேர்ந்த ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் தலத் சலீம் அவர்களிடம் கேட்டோம்.

”தாமரை இலைகளை உபயோகிப்பதற்கு முன்னால் அதனுடைய மருத்துவக்குணங்களைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

இதில் பாலிஃபீனால், ஃபிளேவனாய்டு நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் அதிகம் இருப்பதால், முகத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கையைக் குறைத்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இதில் நிறைந்துள்ள ஆல்கலாய்ட்களான நியோசிஃபரின் (neociferine), ரியோமெரின் (reomerine) ஆகியவை முகத்தில் அலர்ஜி, எரிச்சல் ஏற்படுவதை குறைக்கும்.

Lotus leaf
Lotus leaf

பாரம்பரியமான சீன முறைகளில், தாமரை இலையை வேக வைத்து முகத்தில் வைத்து, முகத்துளைகளை மூடுவார்கள். இதன் மூலம் கருமை போகும்.

தாமரை இலையில் உள்ள பாலிசாச்சுரைட்ஸ், முகத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.

இத்தகைய காரணங்களினால்தான் தாமரை இலைச்சாறு, சீனா மற்றும் கொரியன் அழகு சாதனப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

தாமரை இலையை நேரடியாக முகத்தில் மாஸ்க்காக பயன்படுத்தினால், அதில் இருக்கிற எந்த சத்துக்களையும் முகம் உறிஞ்சிக்கொள்ளாது. எனவே, நேரடியாக உபயோகிப்பதைத் தவிர்த்து, அதை சீரமாகவோ அல்லது தாமரை இலைச்சாறு சேர்க்கப்பட்ட அழகு சாதனப்பொருள்களையோ பயன்படுத்தலாம்.

தாமரை இலைகள் தோல் பராமரிப்பிற்கான பல்வேறு விதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவற்றின் செயல்திறன் மிதமானதுதான். சரியான கெமிக்கல்களுடன் தாமரை இலைச்சாற்றை முறையாகப் பயன்படுத்தப்படும்போது, அவை எண்ணெய் சருமம், வறட்சி, கரும்புள்ளிகளை குறைத்து முகப்பொலிவு, சரும தெளிவு மற்றும் இளமையான தோற்றத்தை வழங்கும்.

ஒரு சிலருக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனென்றால், மனிதர்கள் மேல் பரிசோதிக்கப்பட்ட தாமரை இலைச்சாறு சேர்த்து கிரீம்களின் எண்ணிக்கை மிக குறைவு. தவிர, தாமரை இலைச்சாறுடன் சேர்க்கப்படுகிற கெமிக்கல்ஸை பொறுத்துதான் முகப்பொலிவு ஏற்படும். இதன் காரணமாகவும் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒரு தோல் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு, தாமரை இலைச்சாறு சேர்க்கப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தலாம்” என்கிறார் டாக்டர் தலத் சலீம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *