
சீனாவின் ஹூகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 70 வயதான உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி ஒன்றை வாங்கிவந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுனான் மாகாணத்தின் ஷுவாங்சிகோ டவுனில் வசிக்கும் ஒருவர், உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி உள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, வாங்கிய சவப்பெட்டியில் அந்த வயதான பெண்மணியை அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார். கைவிசிறியை ஏந்தியபடி சவப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவரை பதினாறு பேர் தூக்கி செல்கின்றனர்.
ஊர்வலத்திற்கு முன்னால் ஒரு இசைக்குழு இசைக்கப்பட்டது. வீட்டை அடைந்த பிறகு காணிக்கைகளுடன் ஒரு பாரம்பரிய விழா நடைபெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது அந்த கிராமப்புறத்தில் ஒரு பாரம்பரியம் என்று கூறுகின்றனர். கிராமவாசியின் கூற்றுப்படி இது போன்ற விழாக்களை நடத்த சுமார்$ 2,800 செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.
தாய் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று மகன் இவ்வாறு செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
சீன பாரம்பரியத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது சவப்பெட்டி வாங்குவது அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இதற்காக உயிருடன் இருக்கும் ஒரு தாய்க்கும் சவப்பெட்டி வாங்கி அதில் மரியாதையுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் அந்த நபர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்தது, சிலர் இந்த செயலை பாரம்பரியம் என்று புரிந்து கொண்டாலும், மற்றவர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.