
நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் ‘வேட்டுவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது கார் சேசிங் காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) என்பவர் காரை ஓட்டிவந்து டைவ் அடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.