• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேர்தல் வெற்​றிக்கு அயராது பாடு​படு​மாறு திமுக தொண்​டர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரை வழங்கியுள்ளார். மக்​களின் கோரிக்​கைகளைக் கேட்​பது​போல, திமுக​வினரின் மனக்​குரலை அறிந்து கொள்​வதற்​காக, ‘உடன்​பிறப்பே வா’ எனும் தொகு​தி​வாரி​யான நிர்​வாகி​கள் சந்​திப்​புக் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​வ​தாக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல், சென்​னை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில் நிர்​வாகி​களை நேரடி​யாக சந்தித்து முதல்​வர் கருத்​துகளை கேட்​டறிந்து வரு​கிறார். இது​வரை 12 நாட்​கள் நடை​பெற்​றுள்ள கூட்​டத்​தில் ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகு​தி, வட்​டம், நகர, ஒன்​றிய, பேரூர் நிர்​வாகி​களை சந்​தித்​து, முதல்​வர் கலந்​துரை​யாடி​யுள்​ளார். அப்​போது நிர்​வாகி​களுக்கு உற்​சாகமூட்​டி, புத்​தகங்​கள் வழங்​கியதோடு, தொகுதி நில​வரங்​கள் குறித்து கேட்​டறிந்து வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *