
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வியியல் துறை் தலைவராக பணியாற்றியவர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து கல்லூரியின் புகார் குழுவில் மாணவி புகார் அளித்தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்தினம் தீக்குளிக்க முயன்றார்.