
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது.
இதனிடையே “மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை பழனிசாமி கோவையில் தொடங்கினார். தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், செல்லும் வழிகளில், ஆங்காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்யும் நெசவாளர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்வோர் உள்ளிட்டோரை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.