
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.