
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். ஈசாக் என்பவரது விசைப்படகில் சென்ற ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள், நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.