• July 13, 2025
  • NewsEditor
  • 0

விஜய் சேதுபதி, நித்யா மெனென், காளி வெங்கட், சரவணன், ரோஷினி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாரயணன் இசைமையத்துள்ள இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

“எனக்கும் இயக்குநருக்கும் இருந்த சண்டை”

இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “நிறைய சண்டை சச்சரவுகளுக்கு இடையில் தான் இந்த படமே தொடங்கியது. நான் இவருடன் பணியாற்றக் கூடாது என இருந்தேன், அதேபோல அவரும் என்னுடன் பணியாற்றக்கூடாது என இருந்தார். ஆனால் எங்களுக்குள் தனிப்பட்ட பிரச்னைகள் பெரிதாக இல்லை.

தலைவன் தலைவி

இருவருக்கும் இடையில் ஒரு பூ மலர்வதைப் போல ஒரு அன்பு மலர்ந்து, அதன்பிறகு எல்லாமே எளிதாக நடந்தது. எனக்கு 2009ல் இருந்து அவரைத் தெரியும். இந்த படம் தொடங்கியது ஒரு பெரிய சுழற்சி முடிவடைந்ததைப் போல இருந்தது. அழகான அனுபவம்” என்றார்.

நீண்டநாள் நித்யாவுடன் நடிக்க விருப்பம்!

அத்துடன், “மூன்றாம் பிறை படமெடுத்த சத்யஜோதி நிறுவனத்துடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்.

19(1)(a) என்ற மலையாளப்படத்தில் ஒரு கெஸ்ட்ரோல் பண்ணினப்ப நித்யா அறிமுகம். இருவரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அது இந்த படத்தில் நடந்தது மிக்க மகிழ்ச்சி. அவர் நடித்த எந்த கதாபாத்திரத்திலும் அவரைத் தவிர வேறொருவரை கற்பனை செய்துபார்க்கவே முடியாது. சும்மா வந்தோம் நடித்தோம் என இல்லாமல், எல்லாத் தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக் கூடிய கலைஞர் நித்யா. ” என்றார்.

பேரரசி, ஆகாசவீரன்

“எங்களை டார்ச்சர் செய்ய வைச்ச ஆள் பாண்டிராஜ் சார்”

பாண்டியராஜ் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, “ஒரு 500 கி.மீ பயணம் செய்தோமென்றால் ஒவ்வொரு கி.மீட்டரும் நியாபகம் இருக்காது. ஆனால் சில இளைப்பாறல்கள், தருணங்கள் நினைவில் இருக்கும். அதை நினைத்துப்பார்த்தால் மீண்டும் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றும். அப்படித்தான் பாண்டிராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் இப்போது இருக்கிறது.

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், டார்ச்சரா இருந்தாலும் ஷூட்டிங்கை ரசிச்சோம். விஜய் சேதுபதியையும் நித்யா மெனெனையும் அடிச்சு டார்ச்சர் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆள் வச்ச மாதிரி இருக்கும்.

ஒரு வயது குழந்தையின் நடிப்பு!

இந்த படத்தில் நடித்த குழந்தை மகிழ் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வம் மாதிரி. இவர் பேப்பரில் இவ்வளவு எழுதி வச்சிருக்கார் எப்படி ஒரு வயது குழந்தை நடிக்கும் என நினைத்தோம்.

பாண்டிராஜ் சார் பசங்க, பசங்க 2 பண்ணியிருந்தாலும் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் ரொம்ப அழகாக நடிச்சது அந்த குழந்தைதான். ஒரு கட்டத்தில் எங்களைப் புரிந்துகொண்டது. ரோஷிணி, தீபா அக்கா கூட செல்லாம இருக்கும். என்னைப் பார்த்தா பயப்படும்.

கதையில் முதலில் ஆண் குழந்தை இருந்தது. மகிழினிக்காக அதை மாற்றினோம். மகிழ் வர்ற ஒவ்வொரு காட்சியும் உயிருள்ளதா, உங்களை சந்தோஷப்படுத்துவதா இருக்கும்.

படத்தில் வர்ற ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சநா (இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்) சிறப்பாக ஒரு ஆல்பமே நல்ல பாடல்களாக கொடுத்திருக்கிறார். ஜூலை 25 ரிலீஸ் ஆகுது, எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்புறோம்” எனப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *