
மலையாள நடிகர் ஷேன் நிகமின் 25வது படமான பல்டி, பரபரப்பாகத் தயாராகி வருகிறது.
உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.
இவர் சோடா பாபு என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் அல்போன்ஸ் புத்ரன் தோன்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பல்டி படத்தில் உதயன் என்ற கபடி வீரராக நடிக்கிறார் ஷேன் நிகம். கேங்ஸ்டர் டச் கொண்ட ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக இந்த திரைப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நேரம், பிரேமம் போன்ற ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான பிரித்வி ராஜ், நயன்தாரா நடித்த கோல்டு என்ற படத்தை இயக்கியிருந்தார்.
2023ம் ஆண்டு உடல்நல பிரச்னைகளால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்த அவர், பல்டி மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்!