• July 13, 2025
  • NewsEditor
  • 0

2 கே கிட்ஸும் கால் நூற்றாண்டை தொட்டுட்டாங்க. அவங்களும் லவ், மேரேஜ்னு அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் கட்டங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. ரிலேஷன்ஷிப் தொடர்பா அவங்களோட ஒரு பிரச்னையைப் பற்றி மெள்ள மெள்ள பேச ஆரம்பிச்சிருக்காங்க.

2 K kids Love

’’வயசு 24 ஆயிடுச்சு. வீட்ல மேரேஜ் பத்தி எங்களோட ஓப்பினியன் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. யாரையாவது லவ் பண்ணா ஓபன்னா சொல்லிடு. பெஸ்டி இருந்தாகூட சொல்லு. நாங்ககூட பேசி பார்க்கிறோம். இல்லைன்னா நாங்கதான் மாப்பிள்ளை பார்க்கணுமா..? எதுவா இருந்தாலும், இது உன் வாழ்க்கை. உன் விருப்பம்தான் முக்கியம். நாங்க பார்த்து கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம், இது பிடிக்கல அது பிடிக்கலைன்னு  சொல்றதுக்கு பதில் உனக்கு பிடிச்சவனை நாங்களே நல்லபடியா பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுறோம்”னு சொல்றாங்க. “ஆனா, நாங்க இதுவரைக்கும் யாரையுமே லவ் பண்ணலியே…’’ – இது 2 கே கேர்ள்ஸ் எதிர்கொண்டு வருகிற நிகழ்கால சங்கடம். 

இதுல ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்னா, படிப்பு, நல்ல வேலை, அழகுப்படுத்துதல்ன்னு தன்னம்பிக்கை தருகிற எல்லா விஷயங்களும் 2 கே கேர்ள்ஸ்கிட்ட இருந்தும், பலர் இன்னும் அவங்களோட வாழ்க்கையில ஒரேயொரு காதலைகூட மீட் பண்ணாம இருக்காங்க அப்படிங்கிறதுதான். 2 கே பாய்ஸ் விஷயமும் கல்யாணம், அது தொடர்பான பெற்றோர்களோட பேச்சை தவிர அவங்களோட லைஃப்லேயும் 25 வயசு வரைக்கும் ஒரேயொரு காதலைக்கூட கடந்து வராம பலர் இருக்காங்க. 

2 K kids Love
2 K kids Love

70 கள்ல மற்றும் 80 கள்ல பிறந்தவங்களையும்விட, ஏன் 90 கள்ல பிறந்தவங்களையும்விட 2 கே கிட்ஸ் அவுட் லுக், இன்டலிஜென்ஸ்னு எல்லா விதத்துலயும் ரொம்பவே தெளிவாதான் இருக்காங்க. 70 ஸ், 80 ஸ் கிட்ஸோட சில பல அப்பாவித்தனங்கள், அறிவில்லாத்தனங்கள் 90 ஸ் கிட்ஸ் கிட்ட அவ்வப்போது தலைகாட்டும். ஆனா, 2k கிட்ஸ் தங்களோட பர்சனல், அஃபிஷியல்னு ரெண்டு ஏரியாவுலயும் ரொம்ப தெளிவா இருக்காங்க. ஆனா, இவங்களோட லவ் லைஃப்ல மட்டும் ஏன் இவ்ளோ அப்நார்மலா இருக்கு..?

அப்போ எது நார்மல் அப்படிங்குற கேள்வி வருது இல்லியா? பப்ளிக் எக்ஸாம் வருகிற நேரத்துலதான் எதிர்பாலினம் மேல ஈர்ப்பும் வரும்னு சொல்லுவாங்க. எல்லாம் ஹார்மோன் படுத்துற பாடு. ஸ்கூல் டேஸ்ல வர்ற இந்த எதிர்பாலினை ஈர்ப்பு பெரும்பாலும் ஸ்கூல் முடியும்போதே அதுவும் முடிஞ்சிருக்கும். காலேஜ் போகும்போது அங்க புதுசா ஓர் ஈர்ப்போ இல்ல ஒரு காதலோ வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. இந்த காதல் பெரும்பாலும் உண்மையா இருக்கும். திருமணம் வரைக்கும் இந்த காதல் போராடி பார்க்கும். எங்கேயாவது அபூர்வமா இந்த காதல் ஜெயிக்கும். மத்தபடி தோல்விதான் பெரும்பாலும்.

2 K kids Love
2 K kids Love

இதை தவிர்த்து பள்ளிக்கூடத்துக்கு போற வழியில; காலேஜுக்கு போற வழியில; பஸ் ஸ்டாப்ல ஏன் பஸ்லகூட, அக்கம் பக்கத்து வீட்ல இருந்து, ஒரே ஏரியாவுல இருந்துன்னு நிறைய காதல்கள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலேயும் கடந்து போயிருக்கும். 70 ஸ் மற்றும் 80 ஸ்ல பிறந்தவங்க, அது ஆணோ பெண்ணோ மனசு விட்டு பேசினாங்கன்னா மேலே சொன்ன புரோப்போசல் அனுபவங்களை சிரிச்சுக்கிட்டே ஷேர் பண்ணுவாங்க. 

தெருவெல்லாம் பூத்துக் கிடக்கிற பூக்கள் மாதிரி நிறைய காதல் கோரிக்கைகள் கிட்டத்தட்ட எல்லா பெண்களோட வாழ்க்கையிலுமே வந்து போயிருக்கும். அதுல ஏதோ ஓர் ஆணை அந்தப் பெண்களும் மனசுக்குள்ள விரும்பி இருக்கலாம். இல்ல வெளிப்படையா லவ் பண்ணியிருக்கலாம். 

ஆண்கள் விஷயத்துல அவங்கள அத்தைப் பொண்ணு; மாமா பொண்ணு; கூடப் படிக்கிற பொண்ணுன்னு சிலர் லவ் பண்ணி இருக்கலாம். தவிர, ஒவ்வொரு பசங்களும் சேரன் மாதிரி ஆளுக்கோர் ஆட்டோகிராப் வெச்சிக்கிட்டு இருப்பானுங்க. ஆனா, நிறைய தகுதி, நிறைய சுதந்திரம் இருக்கிற 2 கே கிட்ஸ்ல பலர் ’இதுவரைக்கும் ஒரு காதல்கூட எங்க லைஃப்ல வரலை’ன்னு சொல்றதுக்கு என்னக் காரணம் இருக்க முடியும்னு அவங்க கிட்டயே பேசினோம். அதுக்கு முன்னாடி பொதுவான காரணங்களை தெரிஞ்சுப்போம். அதுக்குப் பிறகு 2 கே பாய்ஸ், 2 கே கேர்ள்ஸ் கருத்துக்களைத் தெரிஞ்சுக்கலாம். 

2 K kids Love
2 K kids Love

2 கே கிட்ஸில் ஆண், பெண் இருபாலருமே படிப்பிலும் கரியரிலும் முழுமூச்சா போக்கஸ் செய்யுறாங்க. அந்த வகையில 2 கே கிட்ஸுக்கு நிஜமாவே காதலிக்க நேரமில்லை. 

சுதந்திரமா இருக்கணும்கிற எண்ணத்துல காதல் பக்கமே தலைவெச்சு படுக்க வேண்டாம்னு அவங்களை அறியாமலேயே முடிவெடுத்துட்டாங்க.

‘காதலே துணை தேடுகிற மனதின் ஏக்கம்தான்.’ 2 கே கிட்ஸ் சோஷியல் மீடியாவே துணையா இருக்கிறதால, அதைத்தாண்டி ஒரு காதலால அவங்க மனசுக்குள்ள நுழைய முடியல.

காதலைவிட தன்னோட தனிப்பட்ட வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிடுகிற தலைமுறையும் 2 கே கிட்ஸாகவே இருக்காங்க.

சிலர் டிராவல், ஹாபீஸ்னு தங்களோட விருப்பங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. இவங்களோட வாழ்க்கையில காதல் இரண்டாம் இடத்துக்கு போயிடுச்சின்னுதான் சொல்லணும்.

ஏன் காதலிக்கணும்; அப்புறம் பிரேக் அப் ஆகி கஷ்டப்படணும்கிற முன்னெச்சரிக்கை காரணமாகவும் 2 கே கிட்ஸ் காதலை தள்ளி வெச்சிருக்காங்க.

2 K kids Love
2 K kids Love

காலேஜ் – வீடு, ஆபீஸ் – வீடு அல்லது ஹாஸ்டல்னு குறிப்பிட்ட இடங்கள்ல மட்டுமே அவங்க இருக்கிறது, புதுப்புது மக்களை அவங்க பார்க்காம இருக்கிறதுதான் காதல் அவங்க வாழ்க்கையில என்ட்ரி ஆகாம இருக்குறதுக்கு ஒரு முக்கியமான காரணம். 

இன்னிக்கு ஆண் பெண் நட்பு பெரும்பாலும் பாசிட்டிவா இருக்கு. இந்த நட்பு, சில ஈர்ப்புகளைகூட காதல் வரைக்கும் கொண்டு போகாம தடை பண்ணிடுது. நல்ல நண்பன் நல்ல கணவனாகவும் இருக்கலாம்கிற எண்ணம் வந்தா ஒருவேளை நண்பன் தன்னை நேசிக்கிறாங்கற விஷயம் 2 கே கேர்ள்ஸ் கண்ணுக்கு புலப்படலாம். 

சில 2 கே கேர்ள்ஸ் வரப்போற கணவன்பத்தி பெரிய பெரிய கனவுகள்ல இருக்கிறப்போ, அவங்க பக்கத்துல இருக்கிற காதல், இவளோட கனவுக்கு நாம செட் ஆக மாட்டோம்னு சொல்லாமலே விலகிடலாம். 

2 K kids Love
2 K kids Love

கிராமப்புற 2 கே பாய்ஸ், காதலை சொல்லி உதை வாங்கின 90 ஸ் கிட்ஸ் மாதிரி நாமளும் உதை வாங்கணுமோங்கிற பயத்துல பெரும்பாலும் காதலை சொல்றதே இல்லியாம். 

அப்படியே சொல்லலாம்னு நினைச்சாலும், ’இந்தப் பொண்ணு ஏற்கனவே கமிட் ஆகி இருப்பாளோ’ங்கிற தயக்கத்துல காதலை வெளியே சொல்றதே இல்லியாம். 

2 கே கேர்ள்ஸோட எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. அவங்களுக்கு சிம்பிளா இருக்கிற ஆண்களை பிடிக்க மாட்டேங்குது. மத்தவங்ககிட்ட அறிமுகப்படுத்துறப்போ லவ்வர் கெத்தா இருக்கணும்னு நினைக்கிறாங்க. நட்பா பழகுறப்போ 2 கே கேர்ள்ஸ் மனநிலை எங்களுக்கு நல்லா புரியுறதால எதுக்கு காதலை சொல்லி அவமானப்படனும்னு நாங்க புரொப்போஸ் பண்றதே இல்லைன்னு சொல்றாங்க. 

நான் 2 கே கிட்ஸ்தான். பட் ஐயம் இன் லவ்னு யாருக்காவது தோணினா, வாழ்த்துகள். விதிவிலக்குகள் எல்லா விஷயத்திலும் உண்டுதானே…

மத்தபடி, காதல் ரொம்ப அழகான உணர்வு. அதை உங்க வாழ்க்கையில மிஸ் பண்ணிடாதீங்க 2 கே கிட்ஸ். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *