
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500 விசைப் படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை (நேற்று) கடலுக்குச் சென்றனர். இதில் ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே உள்ள கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 பேரையும் கைது செய்தனர்.