• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சொகுசு காரை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 9-ம் தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது Audi சொகுசு கார் பாய்ந்தது. இதில் 8 வயது சிறுமி உட்பட நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *