
பாட்னா: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று உறுதி செய்தனர்.
சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.