• July 13, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதனால் டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது.

இந்​நிலை​யில் இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர். அப்​போது காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்​திக்க நேரம் ஒதுக்​க​வில்​லை. இதனால் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை சந்​தித்​து​விட்டு பெங்​களூரு திரும்​பினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *