
சென்னை: “திருமலா பால் நிறுவன மேலாளரின் மரணம் தற்கொலை தான்” என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணையர் அருண் வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மரணம் தற்கொலையா? இல்லையா? என சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையில், அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டதாக தான் தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தை தடவியல் நிபுணர்கள், போலீஸார் ஆய்வு செய்தனர்.