• July 12, 2025
  • NewsEditor
  • 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

படத்தில் ரஜினி, உபேந்திரா, ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர், சத்யராஜ் ஆகியோருடன் ஷ்ருதி ஹாசனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Coolie – Chikitu Song

சில நாட்களுக்கு முன்பு ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அவர் அளித்த பேட்டியில், “கூலி திரைப்படத்திற்கு முன்பு வரை எனக்கு ரஜினி சார் பற்றிய விஷயங்கள் தெரியாது.” எனக் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியான பதிலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார் ஷ்ருதி ஹாசன்.

அந்தப் பேட்டியில் அவர் பேசும்போது, “அப்பாவும், ரஜினி சாரும்தான் தமிழ் சினிமாவின் இரண்டு ஐகானிக் தூண்கள்.

மற்றவர்களைப் போலவே, எனக்கும் ரஜினி சாரைப் பற்றி மக்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மட்டுமே தெரியும். மக்கள் நான் அவருடன் வளர்ந்திருப்பேன் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல. அவர் மற்ற அனைவருக்கும் எப்படி ஒரு சூப்பர் ஸ்டாரோ, எனக்கும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.

Shruti Haasan - Coolie
Shruti Haasan – Coolie

இதுவரை நான் ரஜினி சாரை என் அப்பா சொன்ன விஷயங்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்தேன். அவர் மிகவும் தனித்துவமானவர், கூர்மையானவர், புத்திசாலி.

ஆனால் அதே நேரத்தில் அன்பானவர் மற்றும் பேசுவதற்கு எளிமையானவர். ‘நீங்கள் உண்மையிலேயே மிகவும் கூல்’ என நான் அவரிடம் சொன்னேன்.

ஏனெனில் அவர் அப்படித்தான் இருப்பார். அவர் தனது உயர்ந்த அந்தஸ்தின் பாரத்தை சுமப்பதில்லை. அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு பாசிட்டிவான எனர்ஜியைக் கொண்டு வருவார். அனைவரும் அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தோம்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *