
சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர்' என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது.