
‘அமித் ஷா பேட்டி’
மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
ஏற்கனவே, தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்த போதும், அமித் ஷா கூட்டணி ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசியிருந்தார்.
அப்போதே, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அதிமுக அதிக இடங்களில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
‘அதிமுக vs பாஜக’
இதுவே அமித் ஷாவுக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகத்தான் பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், மீண்டும் இன்றைக்கு ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியிலும் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை அமித் ஷா தெரியப்படுத்தியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் எல்.முருகனும் கூட்டணி விஷயத்தில் அமித் ஷா எடுப்பதே இறுதி முடிவு என்று பேசியிருக்கிறார்..

இந்நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு மீண்டும் பதில் கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
அமித்ஷாவின் பேட்டியை முன்வைத்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.’ எனக் கூறியிருக்கிறார்.